ஒற்றைக் கால் ஊன்றி
ஓடுகையில் நீர் எதிர்த்து
ஓயாமல் ஊன்றினின்று
ஓடிவரும் மீன் பிடித்து
ஓ மானிடா! பார் என்று
ஓங்குதன் கருத்தை
ஓலமிடும் மானிடனுக்கு,
ஓயாமல் காத்திருந்து
ஓய்வெடுக்க வழிகாட்டும்
ஓயாத பொறுமை தனை
ஒப்பிட்டு பார்க்கச் சொல்லும்
ஓறறிவு குறைவால் தாழ்ந்திட்ட
ஓர் பறவை
21.06.2019
நாமென்ற நாமம் மறந்து
நாவிலர் பிரித்து
நாட்டில் கோலோச்சின்
நாம் கனாக் கண்ட
நாடு நாமிழந்து நிற்போம்
12.06.2019
எதிர்ப்பேன் என்று ஏலெட்டுப் படைகள்
எண்ணிலடங்கா ஏகாதிபத்தியத்தோடு
எம் சமூகத்தை ஏறி மிதித்திட
எதுவுமறியா ஏமாளிகளாய்
எம் தலைமைகள் ஏப்பம் விடுகின்றன.
11.06.2019
உரத்துப் பேசின்
உண்மை என்று
உண்மை தனில் தவிர்த்து
உரமூட்டப்பட்ட
உணர்வுகள் - மடமை தவிர்
உண்மை மாற்றங்கள்
வேண்டி நிற்கின்றன.
11.06.2019